தெரிந்தது-தெரியாதது,அறிந்தது-அறியாதது,கேட்டது-கேள்விப்பட்டது,சொன்னது-சொல்லப்பட்டது,படித்தது-பதியப்பட்டது என அனைத்தும் கூடும் துறை இந்த கூடுதுறை.

இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயஞ் செய்து விடல்

Monday, July 7, 2008

தமிழ்மணம் நிர்வாகிக்கு ஒரு அவசர கோரிக்கை

தமிழ்மணம் நிர்வாகிக்கு ஒரு கோரிக்கை

நான் கூடுதுறை, புத்துணர்ச்சி என இருபதிவுகளை சுமார் 10 மாதங்களாக பதிவிட்டு வருகிறேன். ஆனால் எனது பின்னுட்டங்கள் ம திரட்டியில் திரட்டப்படுவதில்லை.

எனது பின்னுட்டங்களை மட்டுறுத்தல் செய்துதான் வெளியிடுகிறேன். இது சம்பந்தமாக பல ஈமெயில்களையும் நிர்வாகிக்கு அனுப்பிவைத்துள்ளேன்.

அவைகளுக்கு எந்த பதிலும் இல்லை.

ஆனால் என்ன காரணத்தால் எனது பின்னுட்டங்கள் தமிழ்மணத்தில் திரட்டப்படுவதில்லை என்று தெரியவில்லை.

ஒரு வரி இரண்டு வரிகளில் வரும் மொக்கை பதிவுகளில் எல்லாம் பின்னுட்டம் திரட்டப்படும் போது ஏன் எனது பதிவுகளின் பின்னுடங்களை திரட்ட மறுத்துவருகிறிர்கள்?

தயவு செய்து எனது இரு பதிவுகளின் பின்னுட்டங்கள் திரட்ட ஏற்பாடு செய்யுங்கள். இல்லை இதற்காக நான் என்ன செய்யவேண்டும் என்பதை தெரியப்படுத்துங்கள்.

மூத்த பதிவிர்களின் கவனத்திற்கு: இது சம்பந்தமாக தங்களின் உதவியையும் ஆலோசனைகளையும் எனக்கு பின்னுட்டமாக அளிக்க வேண்டுகிறேன்

Labels:

Sunday, July 6, 2008

அடுத்த காமெடி - யாருடன் கூட்டு? கார்த்திக் தகவல் -

இதில் அடைப்புக்குறிக்குள் இருப்பது மட்டும்தான் நான் எழுதியது...

கவுரமான எண்ணிக்கையில் இடம் தரும் கட்சிகளுடன் தேர்தல் கூட்டணி அமைக்க நாடாளும் மக்கள் கட்சி தயாராக இருப்பதாக, அதன் தலைவரான நடிகர் கார்த்திக் தெரிவித்துள்ளார்.

(கவுரமான எண்ணிக்கை இடம் = நெஞ்சத்தில் இடம் )

இதுதொடர்பாக மதுரையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாடாளுமன்றத்திற்கு எந்த நேரத்திலும் தேர்தல் வரலாம். தமிழகத்தில் அனைத்து கட்சிகளுமே கூட்டணி அமைத்து போட்டியிடும் சூழ்நிலையில்தான் உள்ளன என்றார்.

(அதாவது எனது கட்சி கூட்டணி அமைத்து போட்டியிட்டால்தான் 3 லக்க ஓட்டாவது பெறமுடியும்)

தேர்தல் கூட்டணி குறித்து அதிமுக உள்ளிட்ட கட்சிகளுடன் பேச்சு நடந்து வருவதாகக் குறிப்பிட்ட கார்த்திக், மக்கள் பிரச்சனைக்கு முக்கியத்துவம் அளிக்கும் அதே நேரம் தனது அதிக இடங்களை ஒதுக்கும் கட்சியுடன் கூட்டணி அமைக்கப்படும் என்றார்.

( பார்வர்டு பிளாக் கட்சியுடன் பேச்சு வார்த்தை இல்லையா?)

அமெரிக்காவுடனான அணு சக்தி ஒப்பந்தத்தை வரவேற்ற கார்த்திக், தற்போதைய சூழ்நிலையில் அணு சக்தி ஒப்பந்தம் நாட்டுக்கு தேவையானது என்றார்.

(ஒகே சொல்லிவிட்டார் இடதுசாரிகள் இனி மத்திய அரசுக்கு தொடர்ந்து ஆதரவு கொடுக்கும்)

Labels:

Friday, July 4, 2008

செல்பேசி உபயோகிப்பார்களே ஜாக்கிரதை !

செல்பேசி பயனர்களை அச்சுறுத்தும் ஹேக்கர்கள்

இதுவரை ஈ-மெயிலில் வந்து நமது வங்கி கணக்கு விவரங்கள் மற்றும் கடன் அட்டை விவரங்களை திருட்டுத்தனமாக பெற்று பணத்தினை அள்ளிச்சென்றவர்கள் இப்போது தங்களது வேலை செல்பேசி காட்டத்தொடங்கியுள்ளனர்

நம் நாட்டில் மாதம் தோறும் பல லட்சம் செல்போன் இணைப்புகள் புதிதாக பெறப்படுகின்றன. இதில் மற்றவர்களுடன் பேசலாம் என்றாலும், பெரும்பாலானவர்களால் அதிகம் பயன்படுத்தப்படுவது எஸ்.எம்.எஸ் சேவை தான்.

தற்போது இந்த எஸ்.எம்.எஸ் பயன்படுத்தி ஹேக்கர்கள் (Hackers), செல்போன் பயனாளர்களை சொந்த நிதி விவரங்களை திரட்டுவது உள்ளிட்ட மோசடி வேலைகளில் கவனம் செலுத்தக் கூடும் என்று சைபர் பாதுகாப்பு நிறுவனங்கள் எச்சரிக்கை செய்துள்ளது.

சமீபத்தில் வடஇந்தியாவைச் சேர்ந்த ஒரு செல்பேசி பயனாளருக்கு வந்த எஸ்.எம்.எஸ்-ல் பிரபல நிறுவனத்தின் மொபைல் பரிசுப் போட்டியில் தங்களுக்கு சுமார் ரூ.12 கோடி பரிசு விழுந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்தத் தொகையைப் பெற ஒரு சர்வதேச தொலைபேசி எண்ணைக் கொடுத்து தொடர்பு கொள்ளுமாறு அந்த எஸ்.எம்.எஸ். தெரிவித்தது. முதலில் உற்சாகமடைந்த அந்த நபர், பிறகு யோசித்துப் பார்த்தார். அதில் குறிப்பிடப்பட்டிருந்த பிரபல நிறுவனத்தின் எந்தப் பொருளையும் தாம் பயன்படுத்தாத போது எதற்கு இதுபோன்று எஸ்.எம்.எஸ். வருகிறது என்று சந்தேகம் கொண்டார்.

இச்சம்பவம் தற்போது செல்போன் பயனாளர்களை எச்சரிக்க உதவி புரிந்துள்ளது. அதாவது இதுபோன்ற நம்பிக்கையூட்டி செல்போன் வாடிக்கையாளர்களை ஏதாவது எண்ணை தொடர்பு கொள்ளச் செய்து தகவல்களைப் பெற்று கிரெடிட் கார்டு, வங்கிக் கணக்கு மோசடிகளில் ஈடுபடலாம் என்று செக்யூரிட்டி நிறுவனங்கள் எச்சரித்துள்ளன.

கார்ட்னர் வெளியிட்டுள்ள தகவலின் படி இதுபோன்ற மோசடிகளால் உலகம் முழுதும் பாதிக்கப்பட்ட ஒரு தனி நபர் 1,244 டாலர்கள் வரை நஷ்டமடைகிறார் என்று தெரிவித்துள்ளது.

இதனால் இந்தியா செல்போன் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகபட்ச எல்லைகளை தொடவுள்ள நிலையில் இந்த மோசடிகள் கணினித் துறையிலிருந்து செல்போன்களுக்கு மாறலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.

மேலே குறிப்பிட்ட வடஇந்தியருக்கு வந்த அந்த ஏமாற்று எஸ்.எம்.எஸ். இதற்கு முன்னோடி என்று ஏஷியன் ஸ்கூல் ஆஃப் சைபர் லா தலைவர் ரோஹாஸ் நாக்பால் தெரிவித்துள்ளார்.

மேலும் ஒரு எண்ணின் தரவுகளை மற்றொரு நபருக்கு தெரிவிப்பது பற்றிய விதிமுறைகள் இந்தியாவில் மிக பலவீனமாக இருக்கிறது என்றும் இந்த துறையை சார்ந்தவர்கள் கருதுகின்றனர்.

வரும் காலங்களில் புதுவகை செல்பேசிகள் ஒரு முழு அளவிலான கணினிப் பயன்பாடுகளாகவே மாறும் சூழ்நிலையில் இது போன்ற அச்சுறுத்தல்கள் மேலும் அதிகரிக்கும் என்று தெரிகிறது.

பாதுகாப்பு ஏற்பாடுகளை சேவை வழங்குவோரின் உதவியுடன், புதிய விதிமுறைகளையும், கண்டுபிடிப்புத் தொழில் நுட்பங்களையும் மேம்படுத்த அரசு கவனம் செலுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

Labels: